Saturday, October 1, 2011

வால்

என் செல்ல நாய்க்குட்டியைக் கேட்டேன்,
'பிங்கு! நானும் உன் போல ஒரு நாய்தானே?'
'எனக்குத் தெரியாது' என்றது அது,
'ஏன் அப்படிச் சொல்கிறாய்?' என்றேன் நான்.
'உனக்குத் தான் வால் இல்லையே' என்றது அது;

'நான் குட்டியாக இருக்கும் போது எனக்கும் வால் இருந்தது!'
'அப்படியா?'
'ஆம் எல்லாரும் என்னை வால் என்றே அழைப்பார்கள்'
என்று சொன்னேன் நான்.

ஆச்சரியத்தால் கண்கள் விரிய வாய் திறந்து
என்னைப் பார்த்தது பிங்கு!

No comments:

Post a Comment